top of page
Search

Strong army - கொன்னல் படையான்

Writer: j rajamohanj rajamohan

Strong army - கொன்னல் படையான்

2.022 திருக்குடவாயில்,   பண் - இந்தளம்,    திருச்சிற்றம்பலம் பாடல்  9

 

பொன்ஒப் பவனும் புயல்ஒப் பவனும்

தன்ஒப்பு அறியாத் தழலாய் நிமிர்ந்தான்,

கொன்னல் படையான், குடவா யில்தனில்

மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

 

சொற்பொருள்

 

பொன் ஒப்பவனும் = ஒளிக்குச் சமமானவர்

புயல் ஒப்பவனும் = ( புயல் = மேகம் ) மேகத்துக்குச் சமமானவர்

தன் ஒப்பு அறியாத் = தனக்கு ஒப்புமை அல்லது நிகர் அறியாதவன் (இல்லாதவன்)

தழலாய் நிமிர்ந்தான், = நெருப்பாய், ஒளியாய் உயிர்த்தெழுந்தவர்

கொன்னல் படையான்,  = வலிமையான படைகள் அல்லது சேனைகளை அதாவது கணங்களை உடையவர்  (கொன்னல் = வலிமையான)

குடவா யில்தனில் = குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில்

மன்னும்  = உயிர்த்தெழுந்து கல்லறை வாயிலில் உறுதியாய் நின்றவர்

பெருங்கோ யில்மகிழ்ந் தவனே = மனிதர்களின் உள்ளமாகிய பெருங்கோயிலில் வாசம் செய்து மகிழ்ந்தவர் ஆவார்

 

விளக்கம்

தெய்வம் ஒளிக்குச் சமமானவர் அதாவது ஒளியானவர் ஆவார், அவர் மேகத்துக்குச் சமமானவர் அதாவது மேகத்தில் இருந்து பேசுபவர் ஆவார், அவர் தனக்கு ஒப்புமை அல்லது நிகர் இல்லாத (அறியாத)  தெய்வம், அவர்  நெருப்பாய், ஒளியாய் உயிர்த்தெழுந்தவர் ஆவார், அவர் வலிமையான படைகளை அல்லது சேனைகளை அதாவது கணங்களை உடையவர் ஆவார். அவர் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் உயிர்த்தெழுந்து கல்லறை வாயிலில் உறுதியாய் நின்றவர் ஆவார். அவர் மனிதர்களின் உள்ளமாகிய பெருங்கோயிலில் வாசம் செய்து மகிழ்ந்தவர் ஆவார்

 


Lord of Hosts
பூத கணங்கள்

விரிவான விளக்கம்

 

1) பொன்ஒப் பவனும் புயல்ஒப் பவனும்

தெய்வம் ஒளிக்கு சமமானவர் அதாவது ஒளியானவர் ஆவார், தெய்வத்தை நாம் அக்கினி மயமான தெய்வம், சேரக்கூடாத ஒழியில் வாசம் பண்ணுகிறவர் என அழைக்கிறோம் எனவே தெய்வத்திற்க்குத் தழல் வண்ணன், செந்தழலோன், அக்கினி ஸ்தம்பம், pillar of fire, பட்சிக்கிற அக்கினி எனப்பெயர்கள் உண்டு

 அவர் மேகத்துக்குச் சமமானவர் அதாவது மேகத்தில் இருந்து பேசுபவர் ஆவார்,  மேகம் என்ற வார்த்தை தெய்வத்தைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது முகில் வண்ணன், மேக வண்ணன், திருமால், மேகஸ்தம்பம், pillar of gloud,  எனத் தெய்வத்தை அழைக்கிறோம் இதைப் பற்றி அறிய கார்த்தீஸ்வரன் என்ற பக்கத்தைப் பார்க்கவும். 

பரிசுத்த வேதாகமம்

உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4:24

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.   1யோவான் 1:5

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.  1 தீமோ 6:16

அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.   மத்தேயு 17:5


2) தன்ஒப்பு அறியாத் தழலாய் நிமிர்ந்தான்,

அவர் தனக்கு ஒப்புமை அல்லது நிகர் இல்லாத ( அறியாத )  தெய்வம், அவர்  நெருப்பாய், ஒளியாய் உயிர்த்தெழுந்தவர் ஆவார், அதாவது அவர் சூரியனைப் போல உதித்து எழுந்தவர் ஆவார். அதனால் தான் வாரத்தின் முதல் நாளுக்கு ஞாயிற்றுக்கிழமை ( Sun Day ) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாமும். தெய்வம் சூரியனைப் போல உயிர்த்தெழுந்ததால் சூரிய வணக்கம் செய்து வருகிறோம்.

 

பரிசுத்த வேதாகமம்

தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? சங்கீதம் 71:19

தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.   அப்போ 26:23


3) கொன்னல் படையான், 

தெய்வம் வலிமையான படைகளை உடையவர் அவரைச் சுற்றி எப்பொழுதும் தேவதூதர்கள் அல்லது பூத கணங்கள் சுற்றி இருந்து துதித்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல வானத்தில் உள்ளவைகளாகிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், இதர கோள்கள் அவருடைய படைகள் ஆகும். அதுவே வான சேனைகள் ஆகும்.  வானத்தில் தெய்வத்தால் படைக்கப்பட்ட வான சேனை என்பது வானத்தில் தேவன் உண்டாக்கிய சூரியன். சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ( planets )  தேவனுடைய திட்டத்தின் படியும், கட்டளையின் படியும் இயங்குகின்றவைகள். 

அவரால் உண்டாக்கப்பட்டு அவரைத் துதிக்கும் மனிதர்கள் ஒரு படைகள் ஆவார்கள். இதையே கொன்னல் படையான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொன்னல் என்றால் வலிமையான என அர்த்தம் ஆகும்.

கடவுளின் சேனை மூன்று வகைப்படும் 1) தேவதூதர் சேனை  ( Army of Angels)  2) தேவ மனிதர்களின் சேனை ( army of saints ) 3) வான சேனைகள் ( Army's of Heaven ). இதைப் பற்றி அறிய தண்டீஸ்வரர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்   


4) குடவா யில்தனில் மன்னும்

தெய்வம் தன்னுடைய சிலுவை மரணத்திற்குப் பிறகு தான் வைக்கப்பட்டிருந்த குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையாகிய குடவாயில் முன்பாக உயிர்த்தெழுந்து உறுதியாய் நின்று கொண்டிருந்த தெய்வம் ஆவார். அதையே குடவாயில் தனில் மன்னும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னுதல் என்றால் உறுதியாய் நிற்றல் என அர்த்தம் ஆகும்.


5) பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

தெய்வம் முன்னறிவித்தபடி நிறைவாக மனிதர்களின் உள்ளமாகிய பெருங்கோயிலில் வாசம் செய்து மகிழ்ந்தவர் ஆவார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு சீசர்களிடம் நான் பரலோகம் சென்று சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை அனுப்புவேன், அவர் உலக மக்கள் உள்ளங்களில் தங்கி வாசம் செய்வார் எனக் கூறினார். அவர் சொன்னபடி நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதையே “வரைஅர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே” என குறிப்பிடப்பட்டுள்ளது..

பரிசுத்த வேதாகமம்

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்   யோவான் 14:16-17.

அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மில் மகிழ்பவர் ஆவார்

 

பரிசுத்த வேதாகமம்

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17

 

இதே விசயத்தை  சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாக குறிப்பிடுகிறது.

 

திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்

 

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

 

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அர்த்தம் பார்க்க http://mydictionary.in

ஒப்பு :  பொருத்தம் ஒருதன்மை ஒப்புமை உவமை தகுதி சமம் இசைவுஅழகு கவனம் ஒப்பாரி சாயல் உடன்படுகை

பொன் :  சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நான்கு வகைப்பட்ட தங்கம் உலோகம் இரும்பு செல்வம் அணிகலன் திருமங்கலியம் பொன்நாணயம் மேருமலை பொலிவு பசலை ஒளி அழகு ஏற்றம் திருமகள் வியாழன் சூரியன் பெண்குறி

புயல் :  மேகம் மழைபெய்கை நீர் கொடுங்காற்று சுக்கிரன்

தழல் : தீ நெருப்பு கார்த்திகைநாள் நஞ்சு காண்க: கொடிவேலி கிளியோட்டுங்கோல் கவண்

 

நிமிர்தல் : உயர்தல் நீளுதல் வளர்தல் ஏறுதல் பரத்தல் நுடங்குதல் நடத்தல் ஓடுதல் மிகைத்தல் தூரமாதல் உயர்ந்ததாதல் நெருங்குதல் உறுதியாதல் இடையிடுதல் முயலுதல் இறுமாத்தல் ;கோள் மீளத் திரும்புதல்

கொன் : பயனின்மை அச்சம் காலம் விடியற்காலம் பெருமை வலிமை

மன்னுதல்  : நிலைபெறுதல் தங்குதல் பொருந்துதல் விடாது முயலுதல் உறுதியாய் நிற்றல் அடுத்தல் மிகுதல்

 
 
 

Comentários


bottom of page