top of page
Search
Writer's picturej rajamohan

sky dance- வானம்பாடி

Updated: Feb 27

sky dance- வானம்பாடி, சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081  பாடல் 7 ஊனம் இல்லா அடியார்


ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற

ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்-

தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே,

கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.


சொற்பொருள்

ஊனம் இல்லா அடியார்  = பரிசுத்த குறைவு அல்லது பாவம் இல்லாத அடியார்கள்

 தம் மனத்தே உற      = மனதில் வாழும் தெய்வம்

ஞானமூர்த்தி,         = அவர் ஞானம் நிறைந்து இந்த பூமிக்கு வந்த கடவுளின் பிள்ளையாவார்

 நட்டம் ஆடி,         = அவர் சிலுவையில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு அதனால் நட்டமாகக் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி  நிறுத்தப்பட்ட தெய்வம் ஆவார். அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தவுடன் கழுக்குன்றம் அருகில் உள்ள ஒரு குகைக் கல்லறையில் வைக்கப்பட்டார். ( ஆடி என்பது குகையாகும்.)

 நவிலும்(ம்) இடம் = அந்த குகைக் கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தன்னைக் காண வந்த மகதலேனா மரியாளிடம் இனிமையாகப் பேசிய இடம் ஆகும்.

தேனும் வண்டும் மது உண்டு =  ( தேன் = இனிமை, மகிழ்ச்சி  வண்டு = கீதம்  மது = ஆவி) அப்படிப்பட்ட இடமாகிய சிலுவையாகிய கழுமரம் நிற்கும் இடத்திற்கு மகிழ்ச்சியும், சங்கீதங்களும், பரிசுத்த ஆவியும் உண்டாகி அல்லது மகிழ்ச்சியோடும், சங்கீதங்களோடும், பரிசுத்த ஆவியோடும்

இன் இசை பாடியே,   = இனிய ஒலியால் பாட்டுப் பாடி

கானம்     = வானம் பாடி  - வானம் தன்னுடைய பாட்டைப்பாடியது அதாவது வானம் தன்னுடைய நிலையில் இருந்து மாறுபட்டு சூரியன் இருளடைந்த நிகழ்வே வானம் பாடி என்று கூறப்பட்டுள்ளது.

அஞ்ஞை  =  அன்னை  -   அப்படிப்பட்ட வானத்தில் மாற்றங்கள் உண்டான நேரம் புனித அன்னையும் சிலுவையின் அருகில்

உறையும் தண் கழுக்குன்றமே = இருந்த இடமாகிய சாந்தமான சிலுவையாகிய கழுமரம் நிற்கும் தண் கழுக்குன்றமே ஆகும்.


விளக்கம்

பரிசுத்த குறைவு அல்லது பாவம் இல்லாத அடியார்களுடைய  மனதில் வாழும் தெய்வம் ஆவார். அவர் ஞானம் நிறைந்தவர், சிறந்தவர் ஆவார். அவர் இந்த பூமிக்கு வந்து மனிதக்குலத்திற்காகத் தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்த கடவுளின் பிள்ளையாவார்.  அவர் சிலுவையில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு அதனால் நட்டமாகக் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி  நிறுத்தப்பட்ட தெய்வம் ஆவார். அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தவுடன் கழுக்குன்றம் அருகில் உள்ள ஒரு குகைக் கல்லறையில் வைக்கப்பட்டார். ( ஆடி என்பது குகையாகும்.). அந்த குகைக் கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தன்னைக் காண வந்த மகதலேனா மரியாளிடம் இனிமையாகப் பேசிய இடம் கழுக்குன்றம் ஆகும். அப்படிப்பட்ட இடமாகிய சிலுவையாகிய கழுமரம் நிற்கும் இடத்திற்கு மகிழ்ச்சியும், சங்கீதங்களும், பரிசுத்த ஆவியும் உண்டாகி அல்லது மகிழ்ச்சியோடும், சங்கீதங்களோடும், பரிசுத்த ஆவியோடும் இனிய ஒலியால் பாட்டுப் பாடி வரவேண்டும். சிலுவையில் இயேசு கிறிஸ்து தனது உயிரை விடும் போது வானம் தன்னுடைய பாட்டைப்பாடியது அதாவது வானம் தன்னுடைய நிலையில் இருந்து மாறுபட்டு சூரியன் இருளடைந்தது அந்த நிகழ்வே வானம் பாடி என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வானத்தில் மாற்றங்கள் உண்டான நேரம் புனித அன்னையும் சிலுவையின் அருகில்  இருந்தார்கள் அப்படிப்பட்ட இடமாகிய சாந்தமான கழுமரம் நிற்கும் தண் கழுக்குன்றமே ஆகும்.


அன்னை
நட்டம்

தெளிவான விளக்கம்

1)   ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற

பரிசுத்த குறைவு அல்லது பாவம் இல்லாத அடியார்களுடைய  மனதில் வாழும் தெய்வம் ஆவார். 

வானம் விட்டு இறங்கி வந்து மனித குமாரனாக வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்து பிறகு பரிசுத்த ஆவியாக எல்லா மனிதர்களின் உள்ளத்திலும்  வாழுபவர்தான் தெய்வம்.

இதையே திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு


உள்ளம் ஒரு பெரிய கோவில், இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு நித்தியசீவன் கொடுப்பது YESHIVAவின் உடம்பு ஆகும். கள்ளமான புலன்கள் ஐந்துக்கும் இருட்டைப் போக்கும் விளக்கு YESHIVAவின் உடம்பு ஆகும்.


பரிசுத்த வேதாகமம்

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17    உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?   1 கொரி 6:19 

 

2)   ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்

அவர் ஞானம் நிறைந்தவர், சிறந்தவர் ஆவார். அவர் இந்த பூமிக்கு வந்து மனிதக்குலத்திற்காக தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்த கடவுளின் பிள்ளையாவார்.  அவர் சிலுவையில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு அதனால் நட்டமாகக் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி  நிறுத்தப்பட்ட தெய்வம் ஆவார். அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தவுடன் கழுக்குன்றம் அருகில் உள்ள ஒரு குகைக் கல்லறையில் வைக்கப்பட்டார். ( ஆடி என்பது குகையாகும்.). அந்த குகைக் கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தன்னைக் காண வந்த மகதலேனா மரியாளிடம் இனிமையாகப் பேசிய இடம் கழுக்குன்றம் ஆகும்.

பரிசுத்த வேதாகமம்

தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.  யூதா 1:25

போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு,அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி,தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது. அவர்கள்: இதை நாம் கிழியாமல்,யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். யோவான் 19:23-24

இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.  யோவான் 20:16-17

 

3) தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே,

அப்படிப்பட்ட இடமாகிய சிலுவையாகிய கழுமரம் நிற்கும் இடத்திற்கு மகிழ்ச்சியும், சங்கீதங்களும், பரிசுத்த ஆவியும் உண்டாகி அல்லது மகிழ்ச்சியோடும், சங்கீதங்களோடும், பரிசுத்த ஆவியோடும் இனிய ஒலியால் பாட்டுப் பாடி வரவேண்டும்.

பரலோகத்தின் தேவனை நாம் எப்படித் துதிக்க வேண்டும் என்பதை பரிசுத்த வேதாகமம் அழகாகக் கூறுகிறது. அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.  சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)


பரிசுத்த வேதாகமம்

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.  சங்கீதம் 100:1-2

கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். சங்கீதம் 95:1-2

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.  யோவான் 4:24

 

4)  கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.

சிலுவையில் இயேசு கிறிஸ்து தனது உயிரை விடும் போது வானம் தன்னுடைய பாட்டைப்பாடியது அதாவது வானம் தன்னுடைய நிலையில் இருந்து மாறுபட்டு சூரியன் இருளடைந்தது அந்த நிகழ்வே வானம் பாடி என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வானத்தில் மாற்றங்கள் உண்டான நேரம் புனித அன்னையும் சிலுவையின் அருகில்  இருந்தார்கள் அப்படிப்பட்ட இடமாகிய சாந்தமான கழுமரம் நிற்கும் தண் கழுக்குன்றமே ஆகும்.

சிலுவை இருள்

சிலுவையில் அறையப்பட்ட ( போது ஏற்பட்ட ) இருள் என்பது சினோப்டிக் நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு நிகழ்வாகும், இதில் ஏறக்குறைய மூன்று மணி நேரம் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது பகலில் வானம் இருண்டது. பெரும்பாலான பழங்கால மற்றும் இடைக்கால கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இதை ஒரு அதிசயம் என்று கருதினர், மேலும் இது புதிய ஏற்பாட்டின் சில அத்தியாயங்களில் ஒன்றாகும் என்று நம்பினர் , இது கிறிஸ்தவம் அல்லாத ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. கி.பி. 197 இல் கிறிஸ்தவ மன்னிப்புக் கலைஞர் டெர்டுல்லியன் தனது அபோலோஜெட்டிகஸில் , இது ஒரு கிரகணம் அல்ல, ஆனால் ஒரு சகுனம் என்று கருதினார் , இது ரோமானிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரிசுத்த வேதாகமம்

இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.  யோவான் 19:25

அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.  சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.  இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.  லூக்கா 23:44-47

------------------------------------------------------------------------------------------------------- NEXT


நட்டம் : நடனம், பிரத்தியயம், ஆறனுள்,  ஒன்று, இழப்பு, நேர்நிலை, கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி இருக்கை     ----     mydictionary.inஆடி = குகை

நவில் = இனிமையாக / இசைபடப் பேசுதல்!2 Apr 2019

மனத்தே உற = மனதில் பட்டதை

தம் ( தமது ) = தன்னுடைய சீசன்

தேன் = இனிமை, தேன். English Word, Honey. Category, தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary). Meaning, மது ; தேனிறால் ; கள் ; இரசம் ; இனிமை

இனிமை = மகிழ்ச்சி, பேரின்பம், மனநிறைவு

கீதம் (சங்கீதம்) =  வண்டு, இசைப்பாட்டு, ----   வடு ( தழும்பு )   வண்டு   A chafer, a beetle or scarab of any kind, சுரும்பு. (c.) 2. An arrow, அம்பு. 3. A fault, குற்றம். 4. A bracelet, கைவளை. 5. A chank, a conch, சங்கு. 6. The eighth lunar mansion, பூசநாள். (சது.) 

மது =  ஆவி https://mydictionary.in/

ஆவி = சுறுசுறுப்பு உணர்ச்சி உணர்வு  மகிழ்ச்சி உயிர் சாராயம் மது ஆதன் ஆவி வேகம்

உண்டு = உண்டாக உண்டுபட, inf. [prop. உண்டாக.] To come into existence, to become form ed or produced by natural process evi dent to the senses, to happen, occur, தோன்ற. 2. To have origin, உண்டாக.

இசை = ஒலி

கானம் = வானம் பாடி

அஞ்ஞை = அன்னை https://mydictionary.in/

6 views0 comments

Recent Posts

See All

Comentarios


bottom of page