Lord of Hosts – சூலப்படையன்,திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம்-பதிகம் 7081 பாடல் 5 புலைகள்தீரத்தொழுமின், தண்டீஸ்வரர்,புன்சடை, வியாகுலதாய்,கணங்கள் இழிவு, தீயநெறி,இழிவான,சிறுமை,ஆணியின் கொண்டை, இலைக்கள்ளி, கள்ளன், முசு.
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்,
இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்-
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே!
புலைகள் தீரத் தொழுமின் = தீயநெறியாகிய துன்மார்க்கத் தன்மைகள் தீருமாறு தெய்வத்தைத் தொழுது கொள்ள வேண்டும்.
புன்சடைப் புண்ணியன் = நாம் வணங்க வேண்டிய தெய்வம் இழிவான பெரிய முட்களை உடைய முள்முடியைத் தன்னுடைய தலையில் ஏற்றுக்கொண்டவர் ஆவார். அவர் இந்தப் பூமியில் இருந்த நாள் எல்லாம் நல்வினை செய்தவர் ஆவார்.
இலை கொள் = இலை என்பது துளிர், துளிர் என்பது முளைத்தல் அல்லது உயிர்த்தல் ஆகும் கொள் என்றால் கொண்ட என்று அர்த்தம் இலை கொள் என்றால் உயிர்த்தெழுதலைப் பங்காகக் கொண்டவர்
சூலப்படையன், = அவர் படைகள் அல்லது கணங்கள் சூழ்ந்து நிற்கின்ற தண்டீஸ்வர்ர் ஆவார் ( Lord of Hosts )
எந்தைபிரான், இடம் = அப்படிப் பட்ட எம்முடைய தந்தையாகிய தெய்வம் இருக்கும் இடமாகிய கழுமரம் நிற்கும் இடம் வந்து தொழ வேண்டும்.
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு = புனிதமான தாயின் மார்பில் பாலாகிய ஆகாரம் உண்டு வளர்ந்த மகனாகிய தெய்வத்தைச் சிலுவையில் இருந்து இறக்கியபோது அந்த புனிதத் தாய் தழுவிய இடம் ஆகும்.
முசுக் கலைகள் = கள்ளனாகக் கருதப்பட்டு கள்ளர்களோடு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் கள்ளன் என்ற தன்மை மாறியதே முசுக்கலைகள் என கூறப்படுகிறது.
பாயும் புறவின் தண் கழுக்குன்றமே = பாயும் புறவின் என்பது வெளியில் இருந்து வந்த இருள் போன்ற நிகழ்வுகளைக் காண்பிக்கிறது ( விளக்கம் கீழே ) அல்லது பாய்ந்து வந்த புறாவைப் போன்ற பரிசுத்தத்தைக் காண்பிக்கிறது. புறாவின் குணமாகிய பரிசுத்தம் பாய்ந்து வந்த சாந்தமான தன்மையுள்ள சிலுவையாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றமே
விளக்கம்
நம் உள்ளத்தில் இருக்கும் தீயநெறியாகிய துன்மார்க்கத் தன்மைகள் தீருமாறு தெய்வத்தைத் தொழுது கொள்ள வேண்டும். அப்படி நாம் வணங்க வேண்டிய தெய்வம் இழிவான பெரிய முட்களை உடைய முள்முடியைத் தன்னுடைய தலையில் ஏற்றுக்கொண்டவர் ஆவார். அவர் இந்தப் பூமியில் இருந்த நாள் எல்லாம் நல்வினை செய்தவர் ஆவார்.
இலை கொள் = இலை என்பது துளிர், துளிர் என்பது முளைத்தல் அல்லது உயிர்த்தல் ஆகும் கொள் என்றால் கொண்ட என்று அர்த்தம் இலை கொள் என்றால் உயிர்த்தெழுதலைப் பங்காகக் கொண்டவர் அவர் படைகள் அல்லது கணங்கள் சூழ்ந்து நிற்கின்ற தண்டீஸ்வரர் ஆவார் (Lord of Hosts) அப்படிப் பட்ட எம்முடைய தந்தையாகிய தெய்வம் இருக்கும் இடமாகிய கழுமரம் நிற்கும் இடம் வந்து தொழ வேண்டும்.
அந்த கழுமரம் நிற்கும் இடம், புனிதமான தாயின் மார்பில் பாலாகிய ஆகாரம் உண்டு வளர்ந்த மகனாகிய தெய்வத்தை சிலுவையில் இருந்து இறக்கியபோது அந்த புனிதத் தாய் தழுவிய இடம் ஆகும்.
கள்ளனாகக் கருதப்பட்டு கள்ளர்களோடு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் கள்ளன் என்ற தன்மை மாறியதே முசுக்கலை என கூறப்படுகிறது.
( பாயும் புறவின் என்பது வெளியில் இருந்து வரும் நிகழ்வுகளைக் காண்பிக்கிறது, இயேசு கிறிஸ்து தன் உயிரைச் சிலுவையில் விடும்போது பூமியெங்கும் அந்தகாரமான இருள் உண்டானது, சூரியன் இருளடைந்தது, தேவாலய திரை சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. இதையே பாயும் புறவு எனக் கூறப்படுகிறது. )
நாம் புறவு என்று வேறு விதமாக அர்த்தம் எடுத்தால் அது புறாவின் தன்மையாகும். இயேசு கிறிஸ்து தன் உயிரை சிலுவையில் விடும்போது பூமியெங்கும் அந்தகாரமான இருள் உண்டானது, சூரியன் இருளடைந்தது, தேவாலய திரைச் சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. அப்படி புறம்பே நடந்த நிகழ்வுகளைப் பார்த்த நூற்றுக்கு அதிபதி அவரை நீதிமான் என அறிக்கையிட்டான். எனவே கள்ளர்களில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற பெயர் மாறியதினால் அல்லது கலைந்ததினால் உண்டான புறாவின் குணமாகிய பரிசுத்தம் பாய்ந்து வந்த சாந்தமான தன்மையுள்ள சிலுவையாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றமே ஆகும்.
விரிவான விளக்கம்
1) புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்,
இந்த உலகத்தில் உள்ள மனிதர்களே நம் உல்லத்தில் ஏற்படும் தீயநெறியாகிய துன்மார்க்கத் தன்மைகள் தீருமாறு தெய்வத்தைத் தொழுது கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் உள்ள மனிதர்களே நம் உல்லத்தில் ஏற்படும் தீயநெறியாகிய துன்மார்க்கத் தன்மைகள் தீருமாறு தெய்வத்தைத் தொழுது கொள்ள வேண்டும். நாம் வணங்க வேண்டிய தெய்வம் புன்சடைப் புண்ணியன் ஆக இருக்க வேண்டும் அதாவது நாம் வணங்க வேண்டிய தெய்வம் இழிவான பெரிய முட்களை உடைய முள்முடியைத் தன்னுடைய தலையில் ஏற்றுக்கொண்டவர் ஆவார். அவர் இந்தப் பூமியில் இருந்த நாள் எல்லாம் நல்வினை செய்தவர் ஆவார். அவர் இந்த பூமியில் இருந்த நாள் எல்லாம் நல்வினை செய்தவர் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு,மரணபரியந்தம்,அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். பிலிப்பியர் 2;8
பரிசுத்த வேதாகமம்
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப் 10:38
2) இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்-
இலை கொள் = இலை என்பது துளிர், துளிர் என்பது முளைத்தல் அல்லது உயிர்த்தல் ஆகும் கொள் என்றால் கொண்ட என்று அர்த்தம் இலை கொள் என்றால் உயிர்த்தெழுதலைப் பங்காகக் கொண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு மூன்றாம் நாள் இலை துளிரைப் போல முளைத்து எழுந்தவர் ஆவார். அவர் படைகள் அல்லது கணங்கள் அல்லது சேனைகள் சூழ்ந்து நிற்கின்ற தெய்வம் ஆவார் அதனால் அவரை கணபதி ( கணங்களின் அரசன் ) என் அழைக்கிறோம். அதனால் அவர் தண்டீஸ்வரர் ஆவார் (Lord of Hosts) அப்படிப் பட்ட எம்முடைய தந்தையாகிய தெய்வம் இருக்கும் இடமாகிய கழுமரம் நிற்கும் இடம் வந்து தொழ வேண்டும். கடவுளின் சேனை மூன்று வகைப்படும் 1) தேவதூதர் சேனை ( Army of Angels) 2) தேவ மனிதர்களின் சேனை ( army of saints ) 3) வான சேனைகள் ( Army's of Heaven )
சேனைகள், படைகள், கணங்கள் பற்றி அறிய தண்டீஸ்வரர் என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
பரிசுத்த வேதாகமம்
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! சங்கீதம் 84:1
சங்கீதம் 80:7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
3) முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு
இந்த இடத்தில் கூறப்பட்ட குட்டி என்பது பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை காண்பிக்கிறது. அவரை தழுவியது அவரது தாயாகிய மரியாள் ஆகும். கழுக்குன்றம் என்ற இடம் சிலுவை இருக்கும் மலையைப் பற்றி பேசுகிறது. எனவே சொல்லப்பட்ட காரியங்கள் அனைத்தும் தெய்வத்தின் தன்மை மற்றும் தெய்வத்திற்கு நடந்த நிகழ்வுகளாகும், எனவே யானை தன் குட்டியைத் தழுவியது போன்ற அர்த்தங்கள் தவறானவை ஆகும்.
புனிதமான தாயின் மார்பில் பாலாகிய ஆகாரம் உண்டு வளர்ந்த மகனாகிய தெய்வத்தைச் சிலுவையில் இருந்து இறக்கியபோது அந்த புனிதத் தாய் தழுவிய இடம் ஆகும்.
இயேசுவின் திருவுடல் அன்னையின் மடியில் - அன்பார்ந்த மகனின் உயிரற்ற திருவுடலை தம் மடியில் வைத்த வேளை துன்பத்தின் வாள் அவரின் இதயத்தை ஊடுருவிப் பாய்ந்த போது சொல்லொண்ணா துயரம் அடைந்தார். அதனால் தான் இயேசு கிறிஸ்துவின் தாயான மரியாளை வியாகுல தாய் என்று அழைப்பது வழக்கம். https://www.youtube.com/watch?v=WzMIi97PGek
பரிசுத்த வேதாகமம்
அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள் பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்..
4) முசுக்கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே!
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் போது இரண்டு கள்ளர்கள் மத்தியில் அதாவது இரு கள்வர்களை இயேசு கிறிஸ்துவுக்கு வலது புறம் ஒருவனையும், இடது புறம் ஒருவனையும் அறைந்தனர். எனவே கள்ளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இப்படி கள்ளனாகக் கருதப்பட்டு கள்ளர்களோடு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் கள்ளன் என்ற தன்மை மாறியதே முசுக்கலை எனக் கூறப்படுகிறது. ( முசு என்பதற்குக் கள்ளன் என்ற அர்த்தம் உண்டு, கலை என்பது கலைதல் ஆகும் )
பாயும் புறவின் என்பது வெளியில் இருந்து வரும் நிகழ்வுகளைக் காண்பிக்கிறது, இயேசு கிறிஸ்து தன் உயிரைச் சிலுவையில் விடும்போது பூமியெங்கும் அந்தகாரமான இருள் உண்டானது, சூரியன் இருளடைந்தது, தேவாலய திரைச் சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. இதையே பாயும் புறவு எனக் கூறப்படுகிறது.
நாம் பாயும் புறவின் என்பதை புறவு என்று வேறு விதமாக அர்த்தம் எடுத்தால் அது புறாவின் தன்மையாகும். இயேசு கிறிஸ்து தன் உயிரைச் சிலுவையில் விடும்போது பூமியெங்கும் அந்தகாரமான இருள் உண்டானது, சூரியன் இருளடைந்தது, தேவாலய திரைச் சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. அப்படி புறம்பே நடந்த நிகழ்வுகளைப் பார்த்த நூற்றுக்கு அதிபதி அவரை நீதிமான் என அறிக்கையிட்டான். எனவே கள்ளர்களில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற பெயர் மாறியதினால் அல்லது கலைந்ததினால் உண்டான புறாவின் குணமாகிய பரிசுத்தம் பாய்ந்து வந்த சாந்தமான தன்மையுள்ள சிலுவையாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றமே ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
அல்லாமலும், அவருடைய ( இயேசு கிறிஸ்து ) வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேக்கூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமக்காரரில் ( கள்ளர்களில் )ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. மாற்கு 15:27-28
அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். லூக்கா 23:44-47 NEXT
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புலை = இழிவு, அழுக்கு, தீட்டு, தீயநெறி, பொய், ஊன், கீழ்மகன், தீநாற்றம்
புன் = இழிவான, சிறுமை
சடை = பின்னலாய் அமைந்த மயிர்முடி, பின்னிய கூந்தல், அடர்ந்த மயிர், வேர், விழுது, இலாமிச்சை, வெட்டிவேர், சடாமாஞ்சில், திருவாதிரைநாள், மிதுனராசி, வேதமோதும் முறைகளுள் ஒன்று, கற்றை, ஆணியின் கொண்டை, நெட்டி, அடைப்பு https://mydictionary.in
இலை = இல்லை அல்லது மான்செவிக் கள்ளி (மறுவடிவம்) இலைக்கள்ளி https://mydictionary.in
கொள் = கொள்' என்பதற்கு ' தனக்குத் தானே ' என்று பொருள்
சூலப்படையன் = படைகள் அல்லது கணங்கள் சூழ்ந்தவன்
கள்ளன் = திருடன்,கரியவன், நடுச்செல்வோன், முசு. நண்டு, கற்கடகராசி https://mydictionary.in
இடவாகுபெயர்; புறம் என்பதன் பொருள், புறத்தே நிகழும் ஒழுக்கம் என்பதாம். புறம் - வெளி. இதுவும் இடவாகு பெயரே.
புறவு = புறா
கலை - கலைதல், கலைவு ; கலை - கலைத்தல், கலைப்பு ; கலைஞர், கலைமகள், கலைவாணி, கலைவிழா, கலை நிகழ்ச்சி, கலைப்படைப்பு
Comments