top of page

 

  தண்டீஸ்வரர் 

 (lord of Hosts)

                                                         

      (  உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே;அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக்குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர். )

தண்டீஸ்வரர் என்றால் தண்டு + ஈஸ்வரர் = தண்டீஸ்வரர் ஆகும்.

 

தண்டு

தண்டு என்றால் சேனை அல்லது படை, (army) ஆகும்.

தண்டீஸ்வரர் என்றால் சேனைகளின் கடவுள், lord of Hosts, அல்லது படைகளின் கடவுள் என அர்த்தம்

தண்டு என்பதற்கு சேனைகள் தங்கும் இடம் ( cantonment ) என அர்த்தம் உண்டு

நம் தமிழ் நாட்டில் தண்டு என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி கீழ்க்கண்ட வார்த்தைகள் உள்ளன.

தண்டாயுதம், தண்டாயுதபாணி, தண்டுப்பாதை, தண்டிலே சேவிக்க, தண்டுக்கழி, (கோல்),  தண்டுக்குப் போக; தண்டெடுக்க,

தண்டாயுதம் என்றால் . A weapon in an Army. --- யுத்த ஆயுதம்.

தண்டுஆயுதபாணி என்றால்  A Soldier who hold a weapon in the battleground, யுத்தத்தில் ஆயுதம் ஏந்தி நிற்க்கும் வீரன்

(தண்டுஆயுதபாணியின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

தண்டுப்பாதை என்றால் A military way or road.--சேனைகள் செல்லும் பாதை

தண்டிலே சேவிக்க என்றால்  to serve in the army.

 தண்டுக்கழி (கோல்) என்றால்  an oar or setting pole,                       

 தண்டுக்குப் போக என்றால்  to go to the camp or Cantonment --- சேனைகள் தங்கியிருக்கும் இடத்துக்குப்போக

தண்டெடுக்க என்றால் to raise an army.- ஒரு படை உருவாக்க

தண்டு என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்க --- கீழே உள்ள link ஐ பார்க்கவும்  

https://agarathi.com/word/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81

பரிசுத்த வேதாகமத்தில் 2 தீமோத்தேயு 2:4 ல் தண்டில் என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது   

" தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னை சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்."     

"No man that warreth entangleth himself with the affairs of this life; that he may please him who hath chosen him to be a soldier."

                                                       

 கடவுளின் சேனைகள் என்றால் என்ன ?

கடவுளின் சேனை என்பது கடவுள் கூடவே இருந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்பவர்கள், அவரை என்நேரமும் புகழ்ந்து பாடுபவர்கள், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள்

( The armys of God are those who are with God and listen to His words, who always praise Him, who carry out His commands. )

கடவுளின் சேனை மூன்று வகைப்படும்

1) தேவதூதர் சேனை  ( Army's of Angels)  

2) தேவ மனிதர்களின் சேனை ( army's of saints )

3) வான சேனைகள் ( Army's of Heaven )

 1) தேவதூதர் சேனைகள்  ( Army's of Angels)

தேவதூதர் சேனை கடவுளைப்புகழ்ந்து பாடவும், மனிதர்களுக்கு உதவ ஏற்படுத்தப் பட்டவர்கள்

a ) வேதாகமத்தில் கடவுளைப்புகழ்ந்து பாடும் நிகழ்வு

ஏசாயா 6:2,3

சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின்  கர்த்தர்  பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்

வெளிப்படுத்தின விசேஷம் 4 : 8

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

b) வேதாகமத்தில் தேவ மனிதரை எதிரிப் படைகள் சூழ்ந்து கொண்டபோது தேவ தூதர்கள் உதவி செய்த நிகழ்வு

II இராஜாக்கள் 6 : 15 to 17                                                                                                         தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

தேவதூதர்கள் வகை

1. சேராபீன்கள்   ( ஏசாயா 6 : 2 )

2.கேரூபீன்கள்   ( ஆதியாகமம் 3 : 24 )

3  மிகாவேல்      ( யூதா 1:9 )

4  காபிரியேல்     ( லூக்கா 1:19 )

  2) தேவ மனிதர்களின் சேனைகள்( army's of saints )

எகிப்தில் கர்த்தருடைய பிள்ளைகள் அடிமை பட்டு இருந்தார்கள், அவர்கள் 430 வருட முடிவில் ஒரு சேனையாய் புறப்பட்டார்கள்.

யாத்திராகமம் 12 41                                                                                                                               நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

 3 ) வான சேனைகள் ( Army's of heaven )  

வான சேனை என்பது வானத்தில் தேவன் உண்டாக்கிய சூரியன். சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ( planets ) ஆகும். இவைகள் தேவனுடைய திட்டத்தின் படியும், கட்டளையின் படியும் இயங்குகின்றவைகள்.                                              

நெகேமியா 9 : 6

நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.

பரிசுத்த வேதாகமம்

சேனைகளின் கர்த்தர், சேனைகளின் அதிபதி,  பற்றி அதிகமான காரியங்கள் மற்றும் விளக்கங்கள்

சங்கீதம் 24:10

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)

சங்கீதம் 46:7

 சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

சங்கீதம் 80:4

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

சங்கீதம் 80:7

சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

சங்கீதம் 80:14

சேனைகளின் தேவனே, திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;

சங்கீதம் 84:1

சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

சங்கீதம் 84:12

சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

( பரிசுத்த வேதாகமத்தில் சேனைகளின் கர்த்தர் (lord of host,) என்ற வார்த்தை 235 இடங்களில் வருகிறது. )

நமது தமிழ் நாட்டில் சேனைத்தலைவர் (Senaithalaivar)   வகையறா என்று அழைக்கப்படுகிறவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் மத்திய மற்றும் தென் தமிழகத்தில் அதிகளவில் வசிக்கின்றனர்

சேனைத்தலைவர் அல்லது சேனையின் அதிபதி ( captain of the Host ) பற்றி பரிசுத்த வேதாகமத்தில் தான் பார்க்க முடியும்.

யேசுவா 5: 14,15                                                                                                                                        அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

 தண்டாயுதபாணி

நாம் தெய்வத்தை தண்டாயுதபாணி என்று அழைக்கிறோம். தண்டாயுதபாணி என்பதற்கு யுத்த ஆயுதம் தரித்து இருப்பவர் என அர்த்தம். ( தண்டு + ஆயுதபாணி = தண்டாயுதபாணி ) தெய்வம் தீமையை அழிப்பதற்காகவும், தேவ மனிதர்களுக்கு உதவவும் மற்றும் மனிதனுடைய தவறுகளைத்திருத்தவும் ஆயுதம் (பட்டயம்) ஏந்தியவராக வருகிறார். தெய்வத்தின் இந்த செயல் பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

பரிசுத்த வேதாகமம்

எரேமியா 47:6                                                                                                                                            ஆ கர்த்தரின் பட்டயமே, எந்த மட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.

லேவியராகமம் 26:33                                                                                                                ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.

உபாகமம் 32:41                                                                                                                                                       மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.                                                                         எசேக்கியேல் 21:5                                                                                                                                               அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.                                                                                                                      எண்ணாகமம் 22:23                                                                                                                    கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

எண்ணாகமம் 22:31                                                                                                                      அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

I நாளாகமம் 21:16                                                                                                                                    தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடையதூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

                                                     *************************************************

தண்டீஸ்வரர் திருக்கோயில் வேளச்சேரி, சென்னையில் அமைந்துள்ளது

 https://tamil.samayam.com/religion/temples/shri-dandeeswarar-temple-yama-installed-lord-shiva-and-prayed-velachery/articleshow/84709760.cms

Guru

bottom of page