top of page

ஓல்லும் வகையான் யார் ?  குறள் 33 - kural 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

 

"  அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும்

(ஓல்லும் வகை செய்வது ) அவருக்குப் பிரியமாயிற்று. "  Bible

 

இந்த குறளுக்கு அனேக விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் எல்லாம்

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். இந்த விளக்கம் சரிதானா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளவை மூலமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

குறள் 33 தெய்வம் பலியான நிகழ்வை வெளிப்படுத்தும் அறன்வழியுருத்தல் பகுதியில் வருகிறது. இந்த குறள் தெய்வம் இந்த பூமிக்கு வந்து சிலுவையில் பலியான காரணங்களில் ஒன்று மனிதனையும் தெய்வத்தையும் ஒன்று சேர்க்க ஆகும். இதைப் பரிசுத்த வேதாகமம் மிகவும் அழகாகக் கூறுகிறது.

குறள் 33 விளக்கம்

 

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

 

ஒல்லும் வகையான் = பொருந்துதல் அல்லது உடன்படுதல் வேலையைச் செய்தவர்

அறவினை           = தெய்வம் செய்த இரட்சிப்பை விட்டு நீங்காதே

ஓவாதே             =  விட்டு நீங்காதே

செல்லும்            =  செல்லுகின்ற

வாய் எல்லாஞ்     = வழி அல்லது இடம் எல்லாம்

செயல்              = செல்வாக்கு

பாவத்தினால் படைத்த தெய்வத்தைப் பிரிந்த மனிதனை தம்முடைய சிலுவை மரணத்தினால் இரட்சிப்பினால் ஒன்று சேர்த்த ( பொருந்தச் செய்த அல்லது உடன்படச் செய்த ) மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் தியாகமாகிய உயிர்பலியாகிய அறத்தை விட்டு நீங்காமல் வாழும் ஒருவனுக்குச் செல்லக்கூடிய வழிகள் அல்லது இடம் எல்லாம் செல்வாக்கு அதாவது நாடெங்கும் செல்லும் மதிப்பு உண்டாகும்.

 

அர்த்தம்

ஒல்லும் =  ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

ஓவாதே - நீங்காது

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

https://dailyprojectthirukkural.blogspot.com/2019/11/Kural33.html#:~:text=%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%2D%20%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%2D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3B%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,%3B%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3B%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3B%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.

 

தரகன் வகையறா

தரகன் வகையறா என்பது சிவகாசியில் உள்ள மக்களின் 12 வகையறாக்களில் ஒன்று ஆகும். தரகன் என்பது அவர்களின் தொழிலைக் குறிப்பதாக நினைக்கிறார்கள் அது அப்படி அல்ல. சிலுவன் வகையறா என  ஒரு வகையறாவைப் பார்த்தோம். 12 வகையறாக்கள் அனைத்தும் தெய்வத்தின் குணத்துக்குச் சம்பந்தம் உள்ளதாகவே உள்ளது.

தரகன் வகையறா என்பது ஒல்லும் வகையான் ஆகிய தெய்வத்தைச் சார்ந்த வகையறா என அர்த்தம் ஆகும். அதாவது ஒப்புரவு ஆக்கிய அல்லது மத்தியஸ்தர் ஆகிய தெய்வத்தின் வகையில் வந்த மக்கள் அல்லது ஒப்புரவு செய்த தெய்வத்தை வணங்கும் வகையறாக்கள் ஆகும்.

 

சிலுவை என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவை கொள்ளப் பயன் படுத்தப்பட்ட ஒரு மரத்துக்குப் பெயர் ஆகும் இந்த வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து வந்தது. மூன்றாம் நூற்றாண்டு வரையும் கிறிஸ்தவர்களுக்கு அடையாளம் மீன் ஆக இருந்தது. அதன் பிறகு சிலுவை ஒரு அடையாள சின்னமாக மாறியது. அப்படி மாறிய கிறிஸ்தவர்களுடைய அடையாளமான இந்த சிலுவையைப் பின்பற்றக்கூடிய வகையறாவாக இந்த சிலுவன் வகையறா மக்கள் இருந்திருக்க வேண்டும்

 

https://tamilandvedas.com/2014/12/10/jesus-name-in-bhagavad-gita-tamil-fish-symbol-in-britain/

 

 

சிலுவன் வகையறாவைப் பற்றி பார்க்கத் திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்       (GO)

இந்த குறளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கீழ் கூறப்பட்டவைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

 

1) ஒப்புரவு ஆகுதல், ஒல்லுதல், பொருந்துதல் அல்லது உடன்படுதல் என்றால் என்ன?

2)மனிதன் ஏன் தன்னைப் படைத்த தெய்வத்தை விட்டு பிரிந்து தூரமாகச் சென்றான் ?

3) உலகத்தில் பாவம் பிரவேசித்த வரலாறு

4) சபிக்கப்பட்ட பூமி

5) தெய்வத்தை விட்டுப் பிரிந்து சென்ற மனிதனை திரும்பவும் தெய்வத்திடம் ஒன்று சேர்க்க அல்லது ஒப்புரவு ஆக்க தெய்வம் எடுத்த முயற்சி என்ன ? அல்லது சபிக்கப்பட்ட பூமி எப்படி ஆசீர்வாதமான பூமியாக மாறியது ?

6) மனிதன் தன்னைப் படைத்த தெய்வத்திடம் திரும்பி வர உண்டான நிபந்தனைகள் என்ன ?

                   -----------------------------------------------------------------------------

1) ஒப்புரவு ஆகுதல், ஒல்லுதல், பொருந்துதல் அல்லது உடன்படுதல் என்றால் என்ன?

 

ஏதோ ஒரு காரணத்தினால் ஒருவரை விட்டு ஒருவர்  பிரிந்து சென்றவர்களை இன்னொருவர் திரும்பவும் ஒன்று சேர்ப்பதுவே ஒப்புரவு ஆகுதல் ஆகும். அப்படி ஒப்புரவாக உதவும் நபர்களை நாம் தரகர்கள், நடுவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், சமரசம் செய்பவர், இடைத்தரகர்,  தலையீடு செய்பவர்,  பரிந்துரை செய்பவர்,  சமரசம் செய்பவர், சமாதானம் செய்பவர், என்று அழைக்கிறோம்.

 

2) மனிதன் ஏன் தன்னைப் படைத்த தெய்வத்தை விட்டு பிரிந்து தூரமாகச் சென்றான்?

 

முதல் மனிதனாகிய ஆதாம் பாவத்தினால் தன்னைப் படைத்த தெய்வத்தை விட்டு விலகிச் சென்ற நிகழ்வு

தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்கி சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

 

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார் தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

 

பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

 

அப்பொழுது தேவனாகிய  கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.  தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

 

ஆதாம் தெய்வம் சாப்பிடக் கூடாது என்று சொன்ன பழத்தைச் சாப்பிட்ட படியால் பாவம் செய்தான்

 

3) உலகத்தில் பாவம் பிரவேசித்த வரலாறு

 

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.  ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;  நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.  அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சன்னிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். இவ்வாறு உலகத்தில் பாவம் உண்டானது

 

ஆதாம் தெய்வம் சாப்பிடக் கூடாது என்று சொன்ன பழத்தைச் சாப்பிட்ட படியால் பாவம் செய்தான் என்பதை சைவசித்தாந்தத்தின் முதல் நூலான திருவுந்தியார் உறுதிப்படுத்துகிறது.

திருவுந்தியார்-உய்யவந்ததேவநாயனார் 41வது பாடலில் பரலோகம் சென்று சேரக்கூடிய முதல் மனிதனாகிய முதலுக்கே மோகக் கொடி படர்ந்து அத்தி பழுத்தது என்று வேகமாகச் சொல்லு. அப்பழம் உண்ணாதே என்று வேகமாகச் சொல்லு எனக் கூறுகிறார்.

41 வது பாடல்

முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்

தத்தி பழுத்ததென் றுந்தீபற

அப்பழ முண்ணாதே யுந்தீபற

முதற் கொடிக்கே

/shaivam.org/saiva-siddhanta/thiruvundiya-uyyavandadeva-nayanar

 

முத்தி    =  பரலோக வாழ்க்கை அடைய வேண்டிய

முதலுக்கே  = முதலில் பிறந்த மனிதனாகிய ஆதாமுக்கே

மோகக் கொடி படர்ந்து  = ஆசை என்ற கொடி சுற்றுக் கொண்டது

அத்தி = பாவம்

பழுத்தது   = உருவானது

அப்பழம் உண்ணாதே என்று உந்தி பற

விளக்கம்

முதல் மனிதானாகிய் ஆதாம் பரலோகம் செல்வதற்காகப் படைக்கப்பட்டவன் அவன் தெய்வம் சாப்பிட கூடாது என்று கூறிய பழத்தின் மேல் ஆசைப்பட்டு அதாவது அந்த பழத்தின் மேல் மோகக் கொடி ( ஆசைக் கொடி ) படரவிட்டு அந்த பழத்தைச் சாப்பிட்ட படியால் ஆதாம் மற்றும் இந்த பூமியில் பாவமாகிய அத்தி பழுத்தது (பாவம் உண்டானது) என்று கூறுகிறார்.

 

4) சபிக்கப்பட்ட பூமி

 

உலகத்தில் பாவம் பிரவேசித்த நாளில் இருந்து இந்த பூமியில் மனிதனின் இரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டே இருந்தது. அதனால் இந்த பூமி சபிக்கப்பட்ட பூமியாக மாறியது. ஆதாமின் இரு பிள்ளைகள் சண்டையிட்டதினால் ஒருவன் இரத்தம் சிந்தி இரந்து போனான். அவனுடைய இரத்தம் இந்த பூமியில் முதன் முதலில் சிந்தப்பட்டது. எனவே இந்த பூமி சபிக்கப்பட்டதாக மாறியது

 

பரிசுத்த வேதாகமம்

அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.  இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.   ஆதி 4 : 10-12

5) தெய்வத்தை விட்டுப் பிரிந்து சென்ற மனிதனை திரும்பவும் தெய்வத்திடம் ஒன்றுசேர்க்க அல்லது ஒப்புரவு ஆக்க

 

தெய்வம் எடுத்த முயற்சி என்ன ? அல்லது சபிக்கப்பட்ட பூமி எப்படி ஆசீர்வாதமான பூமியாக மாறியது ?

மனிதனுடைய இரத்தம் சிந்தப் பட்டதால் சபிக்கப்பட்ட பூமி தன் சாபத்தை விட்டு வெளியேறத் தெய்வம் பலி கொள்கையை உருவாக்கிக் கொடுத்தார். அதனால் தான் ஆடு, மாடு, பறவைகளை நாம் பலியிட்டு அந்த மிருகங்களின் இரத்தத்தை நாம் தரையில் விடுகிறோம். மேலும் நாம் செய்யும் பாவங்களுக்காகவும் (கர்ம பாவம் ), நமது மூதாதையர் செய்த பாவங்களுக்காகவும் ( ஜென்ம பாவம் ) நாம் பலி செலுத்துகிறோம்.

நாளடைவில் பாவங்களும் பலிகளும் பெருகத்தொடங்கின அதனால் மனம் வெறுத்துப் போன தெய்வம் நமது பலிகளை வெறுக்கத் தொடங்கினார்.

 

பரிசுத்த வேதாகமம்

அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;  சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். எபிரெயர் 10:4-6

 

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மத்தேயு 12:7

கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்,........ ஏசாயா 61:8

 

அப்படி பலியை வெறுகத் தொடங்கிய தெய்வம் தனது ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி அவரையே நமது பாவத்திற்காகவும், நமது மீட்பிற்காகவும் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

 

அவருடைய கடைசி சொட்டு இரத்தம் சிலுவையில் இருந்து இந்த பூமியில் விழுந்தது, அதனால் இந்த பூமியில் இருந்த சாபம் நீங்கியது.

 

அதுவரை இரத்தத்திற்கு இரத்தம், கைக்கு கை, காலுக்குக் கால், பலிக்குப் பலி என்று இரத்தம் சிந்திக் கொண்டு இருந்த இந்த உலகம் அன்பின் வழியை அறிந்து கொண்டது.

 

அவருடைய அந்த சிலுவை மரணத்தினாலும், சிந்தப்பட்ட அவருடைய இரதத்தினாலும் நாம் மீட்படைந்து. தகப்னாகிய தெய்வத்தை விட்டு பிரிந்து இருந்த நாம் தெய்வத்தோடு ஒப்புரவாகினோம்.

இறுதிரத்தாரையும் அவர் ஒப்புரவு அல்லது ஒன்று சேர்த்தபடியால் அவர் ஒல்லும் வகையான் எனத் திருவள்ளுவரால் அழைக்கப்படுகிறார்.

 

பரிசுத்த வேதாகமம்

ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே ( கடைசி சொட்டு ) இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.  யோவான் 19:14

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.  எபேசியர் 1:7

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எபேசியர் 2:13

 

[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. கொலோசெயர் 1:14

 

6) மனிதன் தன்னைப் படைத்த தெய்வத்திடம் திரும்பி வர உண்டான நிபந்தனைகள் என்ன ?

 

ஒரு மனிதன் தன்னைப் படைத்த தெய்வத்திடம் திரும்பி வர ஆவியின் கனியாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இவற்றின் மேலாகப் பரிசுத்தம் அவசியம் இப்படி பட்டவைகளை தன்னுடைய உள்ளத்தில் பெற்று இருக்க வேண்டும்.

மாம்சத்தின் அசுத்தமான கிரியைகள் ஆகிய விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகள் தன்னுடைய உள்ளத்தில் இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.;  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறிந்து கொள்ளுங்கள்.

guru

1.jpg
111.JPG
11.JPG
bottom of page